அறிமுகம்

பேரன்பு மிக்க ஆன்மீக அன்பர்களே,

புண்ணிய பாரத பூமியின் சீர்மிகு செந்தமிழ் நாட்டின் தலைநகர் தர்மமிகு சென்னையின் தெற்கு வாயிலான, கூடுவாஞ்சேரி ஆதனுர், கிருஷ்ணபுரியில், அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் அறக்கட்டளையின் பெரும் முயற்சியால் இத்தலத்தில் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு  திருநீலகண்டேசுவரருக்கு சிவாலய திருப்பணி நடைபெற்று வருகிறது.

நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பக்தி சிரத்தையுடன் அமையப்பெற வேண்டுமென்கிற இறை சிந்தனையின் முதல்கட்டமாக அருள்மிகு சிவபெருமானின் செல்லப்பிள்ளையாம் விநாயகர் பெருமான் சன்னதி,  ஸ்ரீ சர்வ மங்கள வல்லப மகா கணபதி என்ற பெயருடன் அமையப் பெற்றுள்ளது
அடுத்தக் கட்டமாக தற்போது அருள்மிகு திருநீலகண்டேசுவரர் சன்னதி,  அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் சன்னதி,  வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சாமி சன்னதி,  சண்டிகேசுவர், நவக்கிரகள் மற்றும் தட்சிணாமூர்த்தி,  துர்க்கை ஆகிய சன்னதிகள் அமைத்து, கும்பாபிசேகம் நடைபெற தேவையான அனைத்துவிதமான பணிகளை உத்தேசித்துள்ளோம்.

தங்களைப் போன்ற இறை அன்பு கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இத்திருகோயிலினை அமைப்பதற்கு நிதி உதவி மூலமாகவோ கட்டுமானப் பொருட்க்களாகவோ கொடுத்து இத்திருப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் பெற்றிடுவோமாக..!