அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் அறக்கட்டளை

அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் அறக்கட்டளையானது 2010 ஆண்டு துவங்கப்பட்டது ,

2011 ஆம் ஆண்டு அறக்கட்டளையில் திருக்கோயில் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டது…

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் திருக்கோயில் கட்ட தீர்மாநீக்கப்பட்ட இடத்தில் பூமி பூஜை செய்து, வல்லப மஹா கணபதி சன்னதி கட்டப்பட்டது…

2011ஆகஸ்ட் 24 இல் சுமார் 13 இலட்சம் செலவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது …

பதிவு எண்: 1386/2010

நிர்வாகிகள்:

தலைவர்: திரு. S.வரதராஜன்

உறுப்பினர்கள்:

திரு. S.மூர்த்தி
திரு. P.சிவானந்தம்
திரு. V.M.சங்கர்
திரு. B.முருகன்
திரு.B.பாபு
திரு.S.பார்த்திபன்

அதன் பின்பாக நித்திய பூஜைகள், மண்டல பூஜைகள், சங்கட ஹர சதுர்த்தி ஆகிய பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது…

2014 நவம்பர் மாதம் திருக்கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் அஸ்திபாரம் போடப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து கொண்டு வருகின்றன…

2016 மார்ச் மாதம் நால்வர் சன்னதிக்கான பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, சிவாலயத்தில் பெருமாள் சன்னதியும் வேண்டும் என்ற ஆன்மிக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுமார் ஏழு அடி உயரத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி அமைக்கப்பட உள்ளோம்.. அதற்கான கட்டுமான பணிகள் தொடந்து நடைபெற்று கொண்டு வருகிறது.

மேலும் பக்த ஆஞ்சநேயர் அவர்களுக்கும் ஒரு சன்னதி கட்டப்பட்டு கொண்டு வருகிறது…

மேலும் திருப்பூர், திருமுருகப்பூண்டி யில் உள்ள குமரன் சிற்ப கலைகூடத்தில், சுமார் 12 இலட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலுக்கான அனைத்து சிற்பங்களும் , ஆகம விதிகளின்படி செய்யப்பட்டு கொண்டு வருகிறது…

2012 முதல் ஆண்டு தோறும், ஆன்மிக அன்பர்களை அறக்கட்டளையின் வாயிலாக ஆன்மிக சுற்றுலாவிற்கு அழைத்து செல்கிறோம் …

ஆண்டுதோறும் 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் (எமது சுற்று வட்டாரத்தில் ) முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை, உற்சாகப்படுத்தும் வகையில் பரிசளித்து கொண்டு வருகிறோம்…

ஒவ்வொரு ஆண்டும் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் அறக்கட்டளையின் வாயிலாக நடைபெற்று வருகிறது…

ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தினத்தன்று வள்ளலார் அவர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கொண்டு வருகிறது…

மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையில் சிறப்பு வாய்ந்த “திருவாசகம் முற்றோதல்" தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது…

இது போல மேலும் பல ஆன்மிக செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற அனைத்து ஆன்மிக அன்பர்களின் ஒத்துழைப்பு வேண்டுமென்று அறக்கட்டளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இறைபணியில் இணைந்திடுங்கள்; இறைவன் அருள் பெற்றிடுங்கள்.